Published : 18 Jun 2018 09:18 AM
Last Updated : 18 Jun 2018 09:18 AM

மோடியின் உடற்தகுதி சவாலை ஏற்றார் கேரள ஐபிஎஸ் அதிகாரி

பிரதமர் மோடி விடுத்துள்ள உடற்தகுதி சவாலை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.எச். யதீஷ் சந்திரா ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி சவாலை ஏற்ற மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். பின்னர் அவர் உடற்தகுதி சவாலை கர்நாடகா முதல்வர் எச்.டி. குமாரசாமி, அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் விடுத்தார்.

இந்த நிலையில் இந்த சவாலை கேரளா ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, “பிரதமரின் சவாலை ஏற்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளேன்” என்றார்.

அவரது வீடியோ தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த உடற்தகுதி சவாலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x