Published : 18 Jun 2018 08:56 AM
Last Updated : 18 Jun 2018 08:56 AM

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும்: பிரதமர் மோடி

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2014-ல் பிரதமர் நரேந் திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, ‘இந்திய மாற்றத்துக்கான தேசிய ஆணை யம்’ (நிதி ஆயோக்) உருவாக்கப்பட்டது. இதன் ஆட்சி மன்ற குழு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் கடந்த ஆண்டில் மேற்கொள்ள வளர்ச்சித் திட்டங் கள் விவாதிக்கப்படும். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

அதன்படி, நிதி ஆயோக்கின் 4-வது ஆட்சி மன்றக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் வருமானம்

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி தற் போது 7.7 சதவீதமாக உள்ளது. இதனை இரட்டை இலக்கமாக உயர்த்த வேண்டும். இது ஒரு சவாலான இலக்கு. இந்த இலக்கை எட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். வேளாண் துறையில் கார்ப்பரேட் முதலீடு குறைவாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசுகள் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் (தேசிய சுகாதார திட்டம்), இந்திரதனுஷ், ஊட்டச் சத்து திட்டங்களை திறம் பட செயல்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகா தார நிலையங்கள் கட்டப்படுகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி கிடைக்கும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும்.

முத்ரா யோஜ்னா, ஜன் தன் யோஜ்னா திட்டங்களால் பொருளாதார சமூக ஏற்றத் தாழ்வு குறையும். நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 115 பின்தங் கிய மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா, திறன் மேம் பாடு திட்டங்களில் மாநில முதல்வர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள், தெருக்களில் எல்இடி பல்புகளை பொருத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தல்

பல்வேறு விவகாரங்களை நிதி ஆயோக் அமைப்பு திறமையாக கையாள்கிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஓர் அணியாகச் செயல்பட வைக்கிறது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டது மிகச் சிறந்த உதாரணம். ஒத்துழைப்பு, கூட்டாட்சி முறை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கியம். நிதி ஆயோக்கின் நடவடிக்கைக ளால் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாநில அரசுகள் தங்களின் ஆலோசனைகளை நிதி கமிஷனிடம் தெரிவிக்கலாம். கடந்த ஆட்சியின்போது மத் திய அரசிடம் இருந்து ரூ.6 லட்சம் கோடி நிதியை மாநில அரசுகள் பெற்றன. தற்போதைய ஆட்சியில் இந்த நிதியாண்டில் ரூ.11 லட்சம் கோடியை மாநில அரசுகள் பெறும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான நிதியுதவி யை மத்திய அரசு வழங்கும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்துவதன் மூலம் செலவைக்குறைக்க முடியும். இதுதொடர்பாக நாடு தழுவிய விவாதங் கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘புதிய இந்தியா 2022’ திட்டத்துக்கான செயல்திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

முதல்வர்கள் கோரிக்கை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 10.5 சதவீதமாக உள்ளது. இதனை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு உதவ வேண்டும்” என்றார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதே கருத்தை கூறினர்.

டெல்லி, ஒடிசா, காஷ்மீர் முதல்வர்களைத் தவிர்த்து இதர மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x