Last Updated : 03 Jun, 2018 08:22 AM

 

Published : 03 Jun 2018 08:22 AM
Last Updated : 03 Jun 2018 08:22 AM

இந்திராணிக்கு மாரடைப்பு; மருத்துவமனையில் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இணை நிறுவனர் இந்திராணி முகர்ஜி, அவரது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை பைகுல்லா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

“இந்திராணிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது” என மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஏப்ரலில் அவர் அரை மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன அழுத்தத்தை போக்கும் மாத்திரைகளை அவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. கடந்த 2 மாதங்களில் இந்திராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது 2-வது முறை.

ஷீனா போரா (24) கடந்த 2012 ஏப்ரலில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராய்கத் மாவட்ட வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்திராணி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷ்யாம்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஷ்யாம்வர் ராய் அப்ரூவராக மாறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x