Published : 08 Jun 2018 06:20 PM
Last Updated : 08 Jun 2018 06:20 PM

எப்போதெல்லாம் பிரதமர் மோடியின் புகழ் சரிகிறதோ கொலைச்சதி செய்திகள் எழுகின்றன: காங்கிரஸ் கருத்து

ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல் பிரதமர் மோடியையும் கொலை செய்ய சதி நடப்பதாக புனே போலீஸாரின் கண்டுபிடிப்பின் மீது ஐயம் எழும் விதமாக காங்கிரஸ் கட்சி தன் கருத்தினை விமர்சன ரீதியாகப் பதிவு செய்துள்ளது.

இத்தகைய செய்திகள் மோடி பயன்படுத்தும் மிகவும் பழைய உத்திகளாகும் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இது அக்கட்சியின் சஞ்சய் நிருபம் கூறும்போது, “நான் இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று கூறவில்லை. ஆனால் அவர் முதல்வராக இருக்கும் காலந்தொட்டே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வந்துள்ளன.

எப்போதெல்லாம் அவரது புகழ் சரிவடைகிறதோ உடனடியாக அவரைக் கொலை செய்ய சதி நடப்பதாக செய்திகள் வெளியிடப்படும். எனவே இதில் எவ்வளவு உண்மை என்பதை விசாரணை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா - கோரேகானில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பை, நாக்பூர், டெல்லியில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

தடகள வீரர்கள் 33% வருமானத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்: ஹரியாணா அரசின் அதிரடி உத்தரவால் சர்ச்சை

பிரதமர் மோடியை பொது நிகழ்ச்சி அல்லது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்த கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியுள்ளது அந்த கடிதத்தில் தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போலவே இந்த கொலையை அரங்கேற்றவும் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை புனே போலீஸார் இன்று தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில் ‘‘தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மேற்கவங்கம், திரிபுரா என பல மாநிலங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சி அமைப்புகளை விரிவு படுத்தி வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நமது அமைப்புக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே நமது அமைப்புகளின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மோடிக்கு முடிவு கட்ட வேண்டும். எனவே ராஜீவ் காந்தி மாதிரி சம்பவத்திற்கு திட்டமிடுகிறோம். தற்கொலைப்படை தாக்குதலுக்கான நேரத்திற்காக காத்திருக்கிறோம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்குக் கூடுதல் பாதுகாப்ப்பு அளிக்கப்பட்டுள்ளபோது காங்கிரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x