Last Updated : 05 Jun, 2018 01:48 PM

 

Published : 05 Jun 2018 01:48 PM
Last Updated : 05 Jun 2018 01:48 PM

நீட்தேர்வில் தோல்வி: 8-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த 19வயது மாணவர், 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவப்படிப்புகளில் சேர நீ்ட் எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் மருத்துப்படிப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடுமுழுவதும் நடந்த நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று நண்பகலில் வெளியிடப்பட்டன. இதில் டெல்லியைச் சேர்ந்த மாணவர் மனமுடைந்து 8-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து துவராகா போலீஸ் துணை ஆணையர் சந்தோஷ் குமார் மீனா கூறியதாவது:

டெல்லி துவாரகா செக்டர் பகுதியில் இருந்து நேற்று மாலை எங்களுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. அதில் 8 மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு இளைஞர் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி சன்னி வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

விசாரணையில் டெல்லி துவாரகாவைச் சேர்ந்த 19வயது மாணவர் பிரணவ் மகேந்திரதா என்பது தெரியவந்தது. நீட் தேர்வில் இரு முறை எழுதியும் இருமுறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்து 8-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்ற கடிதத்தில் இதைக் கூறியுள்ளார். தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடையமுடியாததற்கு பெற்றோர் மன்னிக்க வேண்டும் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். உடற்கூறு அறிக்கை கிடைத்தபின் தற்கொலையா அல்லது வேறுயாரேனும் தாக்கி தள்ளிவிட்டார்களா என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2016-2017-ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் ஆனால் நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை.

எனவே அவர் மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும்39 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி பிரதீபா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x