Published : 24 May 2018 08:45 AM
Last Updated : 24 May 2018 08:45 AM

குமாரசாமி பதவியேற்புக்கு உத்தவ் வரமறுப்பு

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி நேற்று பதவியேற்றார். பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.

ஆனால், மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடக்க உள்ள பல்கார் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பதால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியாது என்றும் குமாரசாமிக்கு வாழ்த்துக்களையும் தேவே கவுடாவிடம் உத்தவ் தாக்கரே தெரிவித்ததாகவும் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் நேற்று மும்பை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x