Last Updated : 24 May, 2018 07:42 AM

 

Published : 24 May 2018 07:42 AM
Last Updated : 24 May 2018 07:42 AM

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு; ஓரணியாக திரண்ட பாஜக எதிர்ப்பு தலைவர்கள்: துணை முதல்வர் ஆனார் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர்

பெங்களூருவில் நேற்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் மஜத-வின் எச்.டி.குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸைச் சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்றார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), பகுஜன் சமாஜ் கூட்டணி 38, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். எந்தக் கட்சிக் கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிஆதரவு அளித்தது.

இதையடுத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் சேர்த்து 118 எம்எல்ஏக்களின் ஆத ரவு கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கடந்த 19-ம் தேதி குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பெங்களூருவில் உள்ள‌ சட்டப்பேரவை வளாகத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் மாநிலத்தின் 24-வது முதல்வராக குமாரசாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் ரக சிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது குமாரசாமி கடவுளின் பெயராலும் விவசாயிகளின் பெயராலும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்றார்.

பதவியேற்ற குமாரசாமி, பரமேஸ்வர் ஆகிய இருவருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட தலைவர் கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா ளர் டி.ராஜா, என்சிபி தலைவர் சரத்பவார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், உத்தரப் பிர தேச முன்னாள் முதல்வர் அகி லேஷ் யாதவ், நடிகர் கமல் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் வாழ்த்தினர். கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, வீரப்பமொய்லி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாழ்த்தினர்.

2019 மக்களவை தேர்தல் கூட்டணிக்கு வழிவகுக்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாஜக எதிர்ப்பு தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பெங்களூரு வந்த தலைவர்களுடம் மிகவும் உற்சாகமாக சிரித்தவாறு நட்பு பாராட்டினர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினி காந்த் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அதேபோல் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குமாரசாமிக்கும் பரமேஸ்வருக் கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட குமாரசாமி, இன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x