Published : 23 May 2018 08:33 PM
Last Updated : 23 May 2018 08:33 PM

குஜராத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் சிக்கின: அழித்தது போலீஸ்

குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதால் அங்கு மதுபான விற்பனை, நுகர்வு, உற்பத்தி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் புதனன்றுஅகமதாபாத் ராமோலில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள சட்டவிரோத மதுபான பாட்டில்களை போலீஸார் கைப்பற்றி அழித்தனர்.

நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மதுபானத் தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. எவ்வளவு கண்காணிப்புகள் இருந்தும் அங்கு தடையை மீறி மதுபான விற்பனை இருந்து வருவது இன்றைய சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆந்திரா, தமிழகம், ஹரியாணா, மிஜோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் முழுதுமோ, பாதியோ மதுவிலக்கை பரிசோதனை செய்து பார்த்தன. ஆனால் ஆட்சி மாறும்போதும், மக்களிடையே இதற்கு எழுந்த கடும் அதிருப்தியினாலும் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதுதான் நடந்தது.

மேலும் வேறு மாநிலங்களிலிருந்து கள்ளக்கடத்தலாக பெரிய அளவில் மது விற்பனை சட்டவிரோதமாக நடப்பதை முழுதும் ஒழிக்க முடியவில்லை என்பதாலும் மதுவிலக்கு வாபஸ் பெறப்பட்ட கதையும் நடந்துள்ளது.

2016-ல் பிஹார் முழு மதுத்தடை விதித்த 4வது மாநிலமானது. அயல்நாட்டு மதுபானங்கள் உட்பட இங்கு எதுவும் கிடையாது என்ற கெடுபிடி சட்டங்களாக பிஹாரில் மாறியது.

2017-ல் கோவா மாநிலத்தில் சில இடங்களில் மதுபானத் தடை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x