Published : 07 May 2018 08:21 AM
Last Updated : 07 May 2018 08:21 AM

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் கமாண்டர், பேராசிரியர் உட்பட 5 தீவிரவாதிகள் பலி: பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர், பேராசிரியர் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந் தனர்.

ஸ்ரீநகரின் சட்டபால் பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக் கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்ரீநகரில் 2-வது நாளாக நேற்றும் செல்போன் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட் டம் பட்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் பலியாயினர்.

இந்த சண்டையில் 2 போலீஸ் அதிகாரிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்தனர். அப்பகுதியிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “கொல்லப்பட்டவர் கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது” என்றார்.

இதனிடையே, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் சதாம் படார், இந்த அமைப்பில் சமீபத்தில் சேர்ந்த உதவி பேராசிரியர் முகமது ரபி பட் ஆகிய இருவரும் பலியானவர்களில் குறிப்பிடத்தக் கவர்கள்.

கந்தர்பால் மாவட்டம் சுந்தினா பகுதியைச் சேர்ந்த பட், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சமூகவி யல் துறையில் ஒப்பந்த உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். வெள்ளியன்று மாயமான அவர், ஹிஸ்புல் அமைப்பில் சேர்ந்ததாக தெரிகிறது.

இதனிடையே என்கவுன்ட்டர் நடந்த பகுதிக்கு அருகே இளைஞர்கள் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இளைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பல்கலைக்கழகம் இன்று முதல் 2 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் இந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு காஷ்மீர் மாவட்டங்கள், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x