Published : 07 May 2018 08:43 AM
Last Updated : 07 May 2018 08:43 AM

அரசியல் நாகரிகமின்றி பேசுகிறார் மோடி: கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அரசியல் நாகரிகமின்றி பேசுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி அண்மையில் பேசியபோது, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசை ‘சீத்தா ரூபய்யா சர்க்கார்’ என்று விமர்சனம் செய்தார். அதாவது பணத்துக்காக செயல்படும் ஊழல் அரசு என்ற அர்த்தத்தில் பிரதமர் கருத்து தெரிவித்தார். மேலும் 10 சதவீதம் கமிஷன் வாங்கும் அரசு என்று மோடி விமர்சனம் செய்து வருகிறார்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறியபோது, தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்பது அரசியல் நாகரிகம். ஆனால் அந்த மரபை மீறி பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது பதவிக்கு அவர் தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல.

பிரதமரின் அரசியல் நாகரிகமற்ற கருத்துகளுக்கும், பொய்களுக்கும் பதில் அளிக்க வேண்டாம் என்றே கருதினேன். ஆனால் அவர் சொல்வது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. அதற்காகவே பிரதமரின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகிறேன்.

10 சதவீத கமிஷன் அரசு என்று மோடி குற்றம் சாட்டி வருகிறார். அதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார். மகதாயி நதிநீர் விவகாரத்தில் கோவாவில் ஆளும் பாஜக அரசு கர்நாடகாவுக்கு துரோகம் இழைக்கிறது. அதை பிரதமர் மோடி மறைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x