Published : 29 May 2018 08:35 PM
Last Updated : 29 May 2018 08:35 PM

சுயேட்சை வேட்பாளருக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த விராட் போலி: மக்கள் அதிர்ச்சி

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய விராட் கோலியை அழைத்து வருகிறேன் என்று கூறிய சுயேட்சை வேட்பாளர் போலியான விராட் கோ(போ)லியை அழைத்து வந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மக்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், அதில் பலவற்றை நிறைவேற்றுவதும், மறப்பதும் இயல்பான ஒன்றாகும். அதேபோல, புனே மாவட்டத்தில், ராமலிங்கா கிராம பஞ்சாயத்தில் சிரூர் கிராமத் தலைவருக்கான தேர்தல் நடந்தது.

இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வித்தால் கணபதி கவாதே என்பவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் நான் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எனக்காகப் பிரச்சாரம் செய்ய 25-ம் தேதி அழைத்து வருகிறேன் என்று எனக் கூறி வாக்குச் சேகரித்தார். அதை விளம்பரப்படுத்தி சுவரொட்டிகளையும் ஒட்டி இருந்தார். இதனை மக்களும், இளைஞர்களும் நம்பினார்கள்.

அதன்படி கடந்த 25-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு விராட் கோலி வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விராட் கோலி வரவில்லை விராட் போலிதான் பிரசாரச்சாரத்துக்கு வந்தார், உண்மையான விராட் கோலி வரவில்லை. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விராட் கோலியைப் பார்க்க திரண்டிருந்த மக்கள் கோலியைப் போல் தோற்றமுடையவரைப் பார்த்து ஏமாற்றமடைந்து, வேட்பாளருடன் சண்டையிட்டனர். விராட் கோலியை அழைத்து வருகிறேன் எனக் கூறி விராட் போலியை அழைத்துவந்துவிட்டாய் எனக் கூறினார்கள்.அதற்கு வேட்பாளர் விராட் கோலியைப் போல் இருக்கும் நபர் எனக்காகப் பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார், எனக்கு வாக்களியுங்கள் எனச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x