Published : 21 Apr 2018 08:14 AM
Last Updated : 21 Apr 2018 08:14 AM

பதவி நீக்க தீர்மானத்தை அரசியலுக்கு பயன்படுத்துவதா?: காங்கிரஸுக்கு ஜேட்லி கடும் கண்டனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்துக்கான நோட்டீஸை, துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் நேற்று வழங்கின.

‘சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2 தினங்களில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நீதிபதி லோயா மரணம் இயற்கையானது. தவறான நோக்கத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸின் சதித்திட்டம் வெளிப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே, பழிவாங்கும் நடவடிக்கையாக, பதவிநீக்க தீர்மானத்துக்கான நோட்டீஸை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன. பதவி நீக்க தீர்மானத்தை அரசியல் ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x