Published : 07 May 2024 07:34 AM
Last Updated : 07 May 2024 07:34 AM
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாசிதர் அருகே இந்திய விமான படைக்கு (ஐஏஎப்) சொந்தமான வாகனத்தின் மீது கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் ஐஏஎப் அதிகாரி விக்கி பஹேடு உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த தாக்கு தலில் தொடர்புடையதாக சந்தே கிக்கப்படும் 2 பேரின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT