Last Updated : 22 Apr, 2018 12:11 PM

 

Published : 22 Apr 2018 12:11 PM
Last Updated : 22 Apr 2018 12:11 PM

குடியரசுத்தலைவர் ஒப்புதல்: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அமலுக்கு வந்தது

12வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்கும் அவசரச்சட்டத்துக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை என்ற விதிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதேப் போன்று நாட்டின் பல நகரங்களில் சிறுமிகள் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து கவலையையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது. நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

ஐரோப்பிய பயணத்தைக் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி வந்தபின் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

இந்திய குற்றப்பிரிவு சட்டம்(ஐபிசி), தி எவிடென்ஸ் ஆக்ட், சிஆர்பிசி விதிமுறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தற்போது பலாத்கார வழக்குகளுக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது. இனிமேல், அது வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டுகளாக முன்பு இருந்தது. அது இனி 20ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதை வாழ்நாள் சிறை தண்டனையும், சாகும் வரை சிறையில் இருக்கவும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

12 வயத்துக்குக்கீழ்ப்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப வாழ்நாள் சிறை, அல்லது மரண தண்டனை அளிக்க முடியும்.

5. அனைத்துவிதமான பாலியல் பலாத்கார வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேல்முறையீட்டுக்குச் செல்லும் போது, 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

ஜாமீனில் கடும் கட்டுப்பாடு

பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஜாமீன் வழுக்குவதிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தல் அல்லது கூட்டுப்பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது.

பலாத்கார குற்றங்களை விசாரிக்கத் தனியாக விரைவு நீதிமன்றங்களை மாநில அரசுகளுடன், யூனியன் பிரதேசங்களுடன், உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாய்வு செய்து உருவாக்குதல்.

அனைத்து போலீஸ் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் பலாத்கார வழக்குகளின் போது, ஆதாரங்களைக் கையாள சிறப்பு கருவிகள் கொடுத்தல்.

குறித்த நேரத்துக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து முடிப்பதற்காகக் கூடுதலாக போலீஸார், மற்றும் நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமித்தல் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த அவசரச்சட்டத்தின் வரைவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அ ரசு நேற்று அனுப்பியது. அதற்கு குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்கள், குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு இனி தூக்கு தண்டனை விதிக்க முடியும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x