Published : 28 Apr 2024 05:20 AM
Last Updated : 28 Apr 2024 05:20 AM

பிஹாரில் இருந்து சட்ட விரோதமாக உ.பி.க்கு கடத்திச் செல்லப்பட்ட 95 சிறுவர்கள் அயோத்தியில் மீட்பு

லக்னோ: பிஹாரிலிருந்து உத்தரபிரதேச மாநிலத்துக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 சிறுவர்கள் அயோத்தியில் மீட்கப்பட்டனர். இவர்கள் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள மதரஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

பிஹார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரபிரதேச மாநிலத்துக்கு பேருந்து ஒன்றில் 95குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக உ.பி.யில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்கள் கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியாக சிறுவர்களைகடத்திச் செல்வதாகவும் தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து அயோத்தி செல்லும் வழியில் வாகனச் சோதனையை போலீஸார் உதவியுடன், குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை மடக்கி சோதனையிட்டதில் அந்த பேருந்தில் 95 சிறுவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர்சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

பிஹாரில் இருந்து உ.பி.யிலுள்ள சஹாரன்பூருக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல்கிடைத்தது. இதையடுத்து அந்தபேருந்தை சோதனை செய்து 95 குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து எந்தவொரு ஒப்புதல் கடிதமும் பேருந்தில் வந்தவர்களிடம் இல்லை.

பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ள போலீஸார், அவர்களிடம் சிறுவர் களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்தக் குழந்தைகள் லக்னோவிலுள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள மதரஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு சர்வேஷ் அவஸ்தி தெரிவித்தார்.

குழந்தைகளை லக்னோவிலுள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x