Published : 22 Apr 2024 06:48 AM
Last Updated : 22 Apr 2024 06:48 AM

80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உ.பி.யின் லாரியா டா கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

கோப்புப்படம்

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ தொலைவில் மத்திய பிரதேச எல்லையின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது லாரியா டா என்ற கிராமம். இங்கு சுதந்திரத்துக்கு முன்பாக ஒரு சில குடும்பங்களே தங்கள் கால்நடைகளுடன் வசித்தனர். இவர்கள் இங்குள்ள நீரூற்றில் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெற்று வந்தனர்.

தற்போது இங்கு மக்கள் தொகை அதிகரித்து விட்டது. ஊற்றில் சுரக்கும் நீர் கிராம மக்களின்தேவையை நிவர்த்தி செய்யவில்லை. கோடை காலங்களில் நீரூற்று வற்றிவிட்டால் இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். சமவெளிப் பகுதிக்கு பால் வியாபாரத்துக்கு செல்பவர்கள் திரும்பிவரும்போது, பால் கேனில் குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக டேங்கர் மூலம் இந்தகிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால் இந்த கிராமத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டும் தண்ணீருக்கே செலவானது.

இதற்க முன்பு இங்கு ரூ.4.87 கோடியில் உருவாக்கப்பட்ட குடிநீர் திட்டம் பலனளிக்கவில்லை. இதனால் லாரியா டா கிராம மக்கள்மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின் ரூ.10கோடியில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

புவியியல் நிபுணர்கள், பனாரஸ் இந்து பல்லைக்கழக குழுவினர், ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள், உ.பி குடிநீர் வாரிய அதிகாரிகள், நமாமி கங்கை திட்ட அதிகாரிகள் இணைந்து உருவாக்கிய குடிநீர் குழாய் திட்டம் தற்போது பலனளித்துள்ளது.

மலை உச்சியில் கிராமம்: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, தண்ணீர் மலை உச்சியில் உள்ளலாரியா டா கிராமத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த கிராமத்துக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டதால், தற்போது குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்கிறது.

சுமார் 80 ஆண்டுகளுக்குப்பின் லாரியா டா என்ற தொலைதூர கிராமத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x