Published : 26 Mar 2024 06:15 AM
Last Updated : 26 Mar 2024 06:15 AM

மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 90% மாநிலங்களுக்கு வழங்கிவிட்டோம்: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய அரசு உயர் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்பு 2023-24 நிதியாண்டில் மூலதன செலவுக்காக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.1.30 லட்சம் கோடி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

எனினும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.1.06 லட்சம் கோடியாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குறைக்கப்பட்டது. சில மாநில அரசுகள் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யாததும் சில மாநிலங்கள் 2022-23 நிதியாண்டுக்கு வழங்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியை செலவிடாததுமே இதற்குக் காரணம்.

இந்நிலையில், மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 90 சதவீதம், அதாவது கடந்த பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி ரூ.95,226 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x