Published : 26 Mar 2024 05:07 AM
Last Updated : 26 Mar 2024 05:07 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: பசுமாடு வாங்க, நாட்டியம், தற்காப்பு கலைகள் பயில, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, வாகனம்
விற்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: பழைய சொந்த - பந்தங்கள் தேடி வரும். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும்.

ரிஷபம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணம் உண்டு. குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புது வேலையில் சென்று அமர்வீர். நெருங்கிய உறவினர்கள் விரும்பி வந்து பேசுவர்.

மிதுனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்
தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கு சாதகமாகும்.

சிம்மம்: வியாபாரம் சூடுபிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும்.

கன்னி: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வீண் செலவுகள் கையைக் கடிக்கும். வழக்கு இழுபறியாகும். நண்பர்கள், உறவினர்களால் மனக் கசப்பு வரக்கூடும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

துலாம்: எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பழைய நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய பிரமுகர்களின் உதவி கிட்டும். வீடு, வாகனச் செலவுகள் அதிகமாகும்.

தனுசு: உங்களிடம் இருக்கும் சோர்வு நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வர். திட்டமிட்ட வெளியூர் பயணம் அமையும்.

கும்பம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். எதிலும் நிதானம் அவசியம். தம்பதிக்குள் வீண் வாக்குவாதம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x