Published : 16 Mar 2024 09:49 PM
Last Updated : 16 Mar 2024 09:49 PM

மக்களவைத் தேர்தல் 2024 அட்டவணையும், 4 மாநில பேரவைத் தேர்தல் தேதிகளும் - ஒரு பட்டியல்

மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்கள்:

  • 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
  • 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.
  • 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
  • 96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
  • 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது.
  • 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
  • 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைமுறைகள் :

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 20
  • வேட்புமனு தாக்கல் முடிவு - மார்ச் 27
  • வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28
  • வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
  • வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள்: மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற உள்ளன. அதற்கான தேதி விவரங்கள்:

  • ஆந்திரா: வாக்குப்பதிவு – மே 13, 2024
  • அருணாச்சலப் பிரதேசம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
  • சிக்கிம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
  • ஒடிசா: மே 13 - 28 சட்டப் பேரவைத் தொகுதிகள் | மே 20 - 35 தொகுதிகள்) | மே 25 - 42 தொகுதிகள் - ஜூன் 1 - 42 தொகுதிகள்)

தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவல்கள்: 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பதவிக்காலமும் நிறைவடைவதால் அவற்றிற்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

  • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தியது.
  • 4 மாநில சட்டப் பேரவைகள் மற்றும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது.
  • சண்டிகர், சென்னை, குவஹாத்தி, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் 5 மண்டல கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதில் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  • தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஆணையம் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளது. இந்த பயணத்தின்போது, அரசியல் கட்சிகள், அமலாக்க முகமைகள், அனைத்து மாவட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆணையம் கலந்துரையாடியது.
  • அனைத்து மாநிலங்களிலும் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்க முடியும்.
  • 18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 01.01.2024 அன்று நிலவரப்படி நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 96.88 கோடி ஆகும்.
  • தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இது மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பொருந்தும்.
  • தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும், குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • நிறைவாக வாக்குச் சாவடி மையங்களுக்கு வருகை தந்து, முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்துமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x