Published : 28 Feb 2018 07:37 AM
Last Updated : 28 Feb 2018 07:37 AM

அமைச்சர்களுக்கு இனி மின்சார கார்

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மின்சார காரில் பயணம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் அமலாக உள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் மாசை தடுக்க, மின்சார வழி போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் உள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மின்சார காரில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x