Published : 18 Feb 2018 02:39 AM
Last Updated : 18 Feb 2018 02:39 AM

பாஜக.வில் இருந்து விலகி அர்விந்தர் சிங் லவ்லி காங்கிரஸ் திரும்பினார்

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, பாஜகவை விட்டு விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந் தார்.

“சித்தாந்த அடிப்படையில் பாஜகவுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று லவ்லி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு லல்வி மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரது தலைமையின் கீழ் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1998-ல் டெல்லி சட்டப்பேரவைக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட லவ்லி, அதன் பிறகு 3 முறை எம்எல்ஏ ஆனார். டெல்லி காங்கிரஸில் சீக்கியர் மற்றும் பஞ்சாபியர் முகமாக திகழ்ந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் நேற்று மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் லவ்லி சந்தித்தார். அஜய் மாக்கன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x