Published : 26 Feb 2018 06:40 PM
Last Updated : 26 Feb 2018 06:40 PM

வேனில் பசுக்களை கொண்டு சென்றவர்களை துரத்திய போலீஸார்: கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கியவர் பலி

ராஜஸ்தானில் வேனில் பசுக்களை ஏற்றிச் சென்றவர்கள்,  பசுக்களை கடத்திச் செல்லவதாக கூறி போலீஸார் துரத்திச் சென்றனர். அப்போது, வேனில் இருந்து கீழே விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வேனில் பசுக்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பசுக்களை கடத்திச் செல்வதாக கூறப்பட்ட வேனை போலீஸார் ஜீப்பில் துரத்தியபடி பின் தொடர்ந்து சென்றனர்.

வேகமாக சென்ற வேனை ஜீப்பில் சென்ற போலீஸார் விரட்டியபோது, அந்த வேனில் இருந்த ஒருவர் கீழே தவறி விழுந்தார்.

அப்போது அவர் வேன் சக்கரம் ஏறி உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து போலீஸார் விரட்டிச் சென்றதால் வேனை நிறுத்தி விட்டு, அதில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர் வேனில் இருந்த பசுக்களை போலீஸார் மீட்டனர். இறந்த நிலையில் 5 பசுக்களும் மீட்கப்பட்டன.

தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆஸ் முகமது என்றும் அவர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x