Published : 24 Feb 2018 06:53 AM
Last Updated : 24 Feb 2018 06:53 AM

58 எம்.பி. பதவிகளுக்கு மார்ச் 23-ல் தேர்தல்

ஆந்திரா -3, தெலங்கானா- 3, கர்நாடகா -4, பிஹார் -6, சத்தீஸ்கர் -1, குஜராத் -4, ஹரியாணா -1, இமாச்சல பிரதேசம்-1, மத்திய பிரதேசம்- 5, மகாராஷ்டிரா- 6, உத்தர பிரதேசம்- 10, உத்தராகண்ட்-1, மேற்கு வங்கம்-5, ஒடி சா- 3, ராஜஸ்தான்-3, ஜார்க்கண்ட்-2 ஆகிய 16 மாநிலங்களைச் சேர்ந்த 58 மாநிலங்களவை எம்பி பதவிக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கேரள ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்பி வீரேந்திரகுமார், தனது பதவியை ராஜினாமா செய்ததால், அதற்கும் சேர்த்து 23-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 5-ல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு நாளான மார்ச் 23 அன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x