Published : 29 Jan 2018 05:33 PM
Last Updated : 29 Jan 2018 05:33 PM
இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகளை அதிகம் விரும்பும் பெற்றோரின் மனநிலை தொடர்வதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தில் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவே பெற்றோர் அதிகம் விரும்புவது தொடர்வதாக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவின் ஆண் - பெண் விகிச்சாரம் சமனற்று இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தேனேஷியா போன்ற நாடுகளில் கூட, 100 பெண்களுக்கு 101 ஆண்கள் என்ற அளவில் விகிதாச்சாரம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற விகித்தில் பாலின சம நிலை உள்ளது. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிட்டால் நிலைமை சற்று முன்னேறியுள்ளது.
இந்தியாவில் பெற்றோர் அதிகம் ஆண் குழந்தைகளை விரும்புவதற்கான காரணம் குறித்து, ஐநாவின் மக்கள் தொகை நிதி நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளிவந்தன. அதில் ‘‘ஆண் குழந்தைகளை பெற்றால் தங்கள் குடும்ப பொருளாதார சூழல் மேம்படும் என என இந்திய பெற்றோர் எண்ணுகின்றனர். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வரும் சூழலிலும், இந்த எண்ணம் தொடர்கிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் வருமானம் ஈட்டி, பொருளாதார நிலையில் உயர்ந்து வரும் சூழலிலும் இந்திய பெற்றோர் ஆண் குழந்தைகளை அதிகம் விரும்புவதற்கு காரணம் இந்திய கலாச்சாரமே. இறுதி சடங்கு செய்வதற்கு ஆண் குழந்தைகள் தேவை என்ற எண்ணம் உள்ளது. மேலும், பெண் குழந்தை என்றால் அதிகமான வரதட்சணை தர வேண்டும். அதே சமயம் ஆண் குழந்தை என்றால் வரதட்சனை வரவாக வரும். வரதட்சணை வாங்கு சட்டப்படி குற்றம் என்றாலும் சமூகத்தில் இந்த பழக்கம் இன்னமும் நீடிக்கிறது’’ என ஐநா அறிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT