Published : 11 Jan 2018 08:34 AM
Last Updated : 11 Jan 2018 08:34 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தின் சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.
‘இஸ்ரோ’ தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.
சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக 2014-ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உட்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப் பார்.