Published : 30 Jan 2018 08:33 AM
Last Updated : 30 Jan 2018 08:33 AM
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மாற்றி உள்ளது.
எம்எல்ஏ மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகிய ஆதாயம் தரும் இரண்டு பதவிகளை வகித்தது தொடர்பான புகாரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டெல்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர்.
இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதி விபு பக்ரு நேற்று உத்தரவிட்டார். இதை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலிக்கிறார். வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வோ அல்லது ஏற்கெனவே இருக்கும் அமர்வோ விசாரிக்க இன்று அவர் உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT