Published : 30 Dec 2017 01:02 PM
Last Updated : 30 Dec 2017 01:02 PM

2017-ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த சில விசித்திரமான வழக்குகள்

2017 முடிந்து 2018-ம்ஆண்டுதொடங்கப்போகிறது. ‘திஇந்து’இந்த ஆண்டில்நடைபெற்றசுவாரசியமானமற்றும்வழக்கத்துக்குமாறானவழக்குகளைத் தொகுத்திருக்கிறது. இதோ அவைஉங்கள்பார்வைக்காக

‘திருக்குறளைஒப்பித்தால்மட்டுமேஜாமீன்

கடந்த பிப்ரவரி மாதம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. மூன்று பொறியியல் மாணவர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வழக்கு அது. வழக்கை விசாரித்த நீதிபதி, "தினந்தோறும் மாணவர்கள் 10 குறள்கள் வீதம், 10 நாட்களுக்கு ஒப்பித்தால் மட்டுமே ஜாமீன் வழங்கப்படும்" என்று உத்தரவிட்டார்.

மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியரிடம் குறள்களை ஒப்புவித்து, பள்ளியில் இருந்து சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே ஜாமீன் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தது அனைவரிடத்திலும் கவன ஈர்ப்பை உண்டாக்கியது.

‘இந்துகடவுள்களின்பெயரைஉரிமைகொண்டாடக்கூடாது’

இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களைத் தங்களின் தொழிலகங்களுக்காக உரிமை கொண்டாடக்கூடாது என்று பாம்பே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ‘ல‌ஷ்மி’ என்ற பெயரைக் கொண்ட துடைப்ப நிறுவனம், ‘மகால‌ஷ்மி’ என்ற போட்டி நிறுவனம் தங்களது பெயரைப் பயன்படுத்திக் கொண்டதாக வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ’’இந்து கடவுள்கள் தனிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. இதனால் அவற்றை யாரும் தனிப்பட்ட முறையில் ஏகபோக உரிமை எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று உத்தரவிட்டது.

‘திருமணபுகைப்படங்களைஅளிக்கமறுப்பதுமனரீதியானதுன்புறுத்தல்’

கட்டணம் முழுமையாக அளிக்கவில்லை என்றுகூறித் திருமண புகைப்படங்களை அளிக்க மறுப்பது மனரீதியான துன்புறுத்தல் என்று டெல்லியில் மாவட்ட நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.

காரணமே இல்லாமல் புகைப்படக்காரர் என் திருமணப் புகைப்படங்களைத் தர அலைக்கழிக்கிறார் என்று ஒரு மணப்பெண் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நுகர்வோர் மன்றம் ’’திருமண நிகழ்வு என்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான நிகழ்வு. அவை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே நினைவுகூரப்படும். அவற்றை அளிக்க மறுப்பது மனரீதியான துன்புறுத்தலே’’ என்றும் கூறியது.

‘மரியாஷரபோவாவுக்குஎதிராகஎஃப்ஐஆர்’

5 முறை கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்ற ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, ஆடம்பர குடியிருப்பு மோசடி விவகாரத்தில் இந்திய போலீஸின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். ஆடம்பரக் குடியிருப்புத் திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனம் மோசடி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை வீடு வாங்குவோரிடம் இருந்து சுருட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இதற்காக டெல்லி நீதிமன்றம் ஷரபோவாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவுசெய்ய உத்தரவிட்டது.

‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறை தண்டனை, அபராதம்: நீதிபதிகர்ணனின்விநோதவழக்கு’

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது அப்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதற்குப் பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

அதையடுத்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

ஏழு நீதிபதிகளும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு விசா வழங்கக்கூடாது என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இது நீதித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், ஓய்வுபெற்ற நிலையில் கர்ணன் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார்.

‘டெல்லியில்டீசல்ஆட்டோவில்பாலியல்வன்கொடுமைசாத்தியமில்லை’

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஒரு பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னுக்குப் பின் முரணாக அவரது பதில்கள் இருந்தன. ஹரியானா பதிவு எண்ணுடன் கூடிய அந்த வண்டி டீசலில் ஓடியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் டீசல் வண்டிகள் டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளதைக் கூறிய நீதிமன்றம், இந்த வன்கொடுமை புகார் உண்மையாக இருக்கமுடியாது என்று உத்தரவிட்டது.

‘மனைவியைகொன்றதற்காககிரிமினஸ்நிகழ்ச்சிநெறியாளருக்குஆயுள்தண்டனை’

‘இந்தியாவின் அதிகம் தேடப்படுபவர்கள்’ என்னும் கிரிமினல் நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் சுஹைப் இலியாசி. அவர் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பான நிகழ்ச்சியைத் தயாரித்து, இயக்கி, நெறியாளுகை செய்துவந்தார்.

அவருக்குத் தன் மனைவி அஞ்சு இலியாசியைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை அளித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

‘யானைகளைபிச்சையெடுக்கவைக்காதீர்கள்’

யானைகளை ஆசிர்வதிக்கக் கூறி, பணம் பெறுவது பிச்சை எடுக்க வைப்பதேயன்றி வேறல்ல என்று கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.

தனது யானையை அதிகாரிகள் சிலர் பறிமுதல் செய்து, பிச்சையெடுக்க வைத்ததாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இத்தகைய செயல்களில் ஈடுபடுவது விலங்குகளுக்கு எதிரான வன்முறை என்று கூறியது. அத்துடன் யானைகளுக்கு உகந்த சூழ்நிலையையும், ஆரோக்கியமான சுகாதாரத்தையும் உருவாக்கித் தர வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘சிவலிங்கத்தின்முன்னால்அனைவரும்அமைதிகாக்கவேண்டும்’

அமர்நாத் குகையில் இயற்கையான முறையில் உருவான பனி சிவலிங்கத்தின் முன்னால் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தீர்ப்பாயம் கூறும்போது, ’’ஒலி, வெப்பம் மற்றும் அதிர்வு ஆகியவை பனிலிங்கத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்கள், அதன் புனிதத் தன்மை மற்றும் ஆதி நிலைக்குப் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடாது. இதனால் பனிலிங்கத்தின் முன்னால் அனைவரும் அமைதி காக்கவேண்டும்.அத்துடன் ஒரு வழி வரிசை மட்டுமே குகையில் பின்பற்றப்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

‘மதுவுக்காகநீண்டவரிசையில்நிற்கவைப்பதுசுயமரியாதைமீறல்’

குடிமகன்களை மதுவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வைப்பது சுயமரியாதை மீறல் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

‘’இதற்காக போதிய அளவில் காத்திருப்பு இடங்களை உருவாக்கி, அளிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் சட்ட ஒழுங்கு பேணப்படுவதை உள்ளூர் காவல் நிலையம் உறுதி செய்யவேண்டும்’’ என்றும் மதுக்கடைகளைக் கோரியது நீதிமன்றம்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x