Published : 23 Dec 2017 09:30 AM
Last Updated : 23 Dec 2017 09:30 AM

இயற்கை பேரிடர்களை சமாளிக்க கன்னியாகுமரியில் கடற்படை தளம் அவசியம்: அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

இயற்கை பேரிடர்களை சமாளிக்க கன்னியாகுமரியில் கடற்படைத் தளத்தை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பி பி.ஆர்.சுந்தரம் வலியுறுத்தினார்.

ஒக்கி புயல் தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் கேரள காங்கிரஸை சேர்ந்த கே.சி. வேணுகோபால் பேசியபோது, ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை. இந்த புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பி பி.ஆர். சுந்தரம் பேசியபோது, ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிக்க கன்னியாகுமரியில் கடற்படைத் தளத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியபோது, கடலில் சடலங்கள் மிதந்தால் அதனை மீட்க கடற்படை கப்பல்களில் போதிய வசதி இல்லை என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிக்க அமெரிக்க புயல் எச்சரிக்கை மையத்துடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியபோது, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். காணாமல் போன மீனவர்களை கடற்படை, கடலோர காவல் படையின் 18 கப்பல்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x