Published : 10 Nov 2017 03:48 PM
Last Updated : 10 Nov 2017 03:48 PM

ஜிஎஸ்டி வரியைப் புரிந்துகொள்ள முடியவில்லை: ம.பி.பாஜக அமைச்சர் பேச்சு

 

ஜிஎஸ்டி வரியை புரிந்துகொள்ள முடியவில்லை என பாஜகவை சேர்ந்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே பேசி இருப்பது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. வரி விகிதம் அதிகமாக இருப்பதுடன், மிகவும் குழப்பமாகவும், சிக்கலாகவும் இருப்பதாக புகார் கூறி வருகின்றன.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான ஓம் பிரகாஷ் துர்வே, ஜிஎஸ்டி வரியை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் ''ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் இதனை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x