Published : 07 Nov 2017 03:18 PM
Last Updated : 07 Nov 2017 03:18 PM

டெல்லியை நெருக்கடியில் ஆழ்த்திய காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பரிசீலிக்கும் கேஜ்ரிவால் அரசு

கடும் மூடுபனியுடன் காற்றில் மாசடைதல் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதால் பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

200மீ தூரத்துக்குத்தான் வருவனவற்றை பார்க்க முடியும் என்ற அளவுக்கு பனி மூடியுள்ளது. இது பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான், மேற்கு உத்திரப்பிரதேச பகுதிகளில் 25 மீ தூரம் வரைதான் தெரியும்படியாக மோசமாகியுள்ளது.

இந்திய மருத்துவக் கழகம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எழுதும்போது, நகரில் காற்றின் மாசு மிக மோசமடைந்துள்ளதால் பள்ளிகளில் வெளியில் விளையாடும் விளையாட்டுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

இந்திய மருத்துவக் கழக தேசியத் தலைவர் கே.கே.அகர்வால் தன் கடிதத்தில், “காற்றில் மாசடைதல் நிலை மோசமானதிலிருந்து மிக மோசமானதாக மாறியுள்ளது. இதனையடுத்து ஆரோக்கியமானவர்கள் கூட உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே குழந்தைகளுக்கும் இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், எனவே வெளியில் விளையாடும் விளையாட்டு நடவடிக்கைகளை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x