Published : 18 Nov 2017 05:22 PM
Last Updated : 18 Nov 2017 05:22 PM

ஆபாச வலைதளங்களை முடக்கி பக்தி பாடல்களை ஒலிக்க வைக்கும் ‘ஹர ஹர மகாதேவ் செயலி’

ஆபாச வலைதளங்களை முடக்க ஹர ஹர மகாதேவ் என்ற செயலியை பனாரசைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பனாரஸில் உள்ள இந்து மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஜயநாத் மிஸ்ரா என்ற பேராசிரியர்தான் இந்த செயலியை தனது குழுவுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

ஆபாச வலைதளங்களை முடக்கும் இந்த செயலியின் சிறம்பம்சம் என்னவென்றால் உங்கள் கைப்பேசியிலோ, கணினியிலோ இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டால் உங்கள் தொலைப்பேசியில் நீங்கள் ஆபாச வலைதளங்கள் தொடர்பான சைட்டுகளைப் பார்க்கும்போது இந்த செயலி அவற்றை முடக்கி அவற்றுக்கு பதிலாக பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்கிறது.

இதுகுறித்து பேராசிரியர் மிஸ்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “ஹர ஹர மகாதேவ் செயலிக்கு அடுத்த மாதம் முதல் பல்வேறு மதங்கள் சார்ந்த பாடல்களை ஒலிக்கச் செய்ய இருக்கிறோம். எடுத்துக்காட்டாக முஸ்லிம் மதத்தினர் ஆபாச பக்கங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லா பாடல்கள் ஒலிக்கும்.

இந்த செயலியை முதலில் உருவாக்கும்போது முதலில் நான் எனது குழந்தைகள், எனது நோயாளிகள், எனது மாணவர்களை நினைத்து உருவாக்கினேன். ஆனால் தற்போது இது உலகத்துக்கே தேவை என்று நினைக்கிறேன்” என்றார்.

ஹர ஹர மகாதேவ் செயலி குறித்து பனாரஸ் இந்து பல்கலைகழக கண்காணிப்பாளர் கூறும்போது, “ஹர ஹர மகாதேவ் செயலி ஒரு நல்ல முயற்சி. சமூகத்தில் சிதைந்த மனநிலையை இது கட்டுப்படுத்த உதவும்” என்றார்.

ஹர ஹர மகாதேவ் செயலி 3,800 ஆபாச வலைதளங்கள் முடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x