Published : 20 Nov 2017 04:29 PM
Last Updated : 20 Nov 2017 04:29 PM

கேரளாவில் ஒரே நாளில் கொலையாளியைக் கண்டுபிடித்த ரூனி நாய்

 

கேரளாவில் 56 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரூனி என்ற காவல் நாய் ஒரே நாளில் கொலையாளியைக் கண்டுபிடித்துள்ளது.

கேரள காவல்துறை அகாடமியால் திருச்சூர் தலைமையகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இரண்டரை வயது நாய் ரூனி.

கேரளத்தின் பொடவடுக்கம் என்ற ஊரில் வசிப்பவர் அம்புட்டி நாயர். அவரின் 56 வயது மனைவி லீலா. அவர் புதன்கிழமை அன்று முகம் தெரியாத நபர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளரால் நகைகளுக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூனி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உடனே வேறோர் இடத்துக்கு விரைந்த ரூனியைக் காவல்துறையினர் பின்தொடர்ந்தனர். அங்கே துண்டால் சுற்றப்பட்ட லீலாவின் தங்க செயின் ரூனியால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நாளில் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்பட்ட நான்கு தொழிலாளர்களை, காவல்துறை தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. அவர்களில் அபுல் ஷேக் என்பவர் மீது ரூனி பாய்ந்தேறியது. இதனால் வேறுவழியின்றி அபுல் ஷேக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கொலைவழக்கில் ஒரே நாளில் குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரூனியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இத்தகவலை காவல் படையைச் சேர்ந்த ஜின்ஸ் ஜோசப் பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x