Published : 10 Nov 2017 04:15 PM
Last Updated : 10 Nov 2017 04:15 PM

நரகமான சுற்றுச்சூழல்; மூச்சுக்கு மூச்சு மரணத்துக்கு அருகில் செல்கிறோம்: ஹர்பஜன் சிங் காட்டம்

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் காற்றில் மாசு புகைமண்டலமாக சூழ சுற்றுச்சூழல் படுநாசமடைந்துள்ளதை அடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வாழ்க்கை நரகமாகிவருகிறது என்று சாடினார்.

அடுத்த மாதம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று ‘அறியாத’ சமூகவலைத்தளதாரர்கள் கூறுவதை கடுமையாகச் சாடிய ஹர்பஜன் சிங், ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் சென்று வருகிறோம். நாளுக்குநாள் மோசமடைந்துதான் வருகிறது. சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியபோது, “நம் சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம். ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் வந்து விட்டுச் செல்கிறோம், மரணத்தின் அருகில் இருக்கிறோம். சீரியசான விவகாரம், எச்சரிக்கை அறிகுறி, முடிவு நெருங்குகிறது.

மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் நாம் இது பற்றி அறியாமையில் இருப்பதே. அடுத்த மாதம் சரியாகிவிடும் என்று சமாதானம் தேடுகிறோம். ஆனால் நாளுக்குநாள் இது மோசமடைந்துதான் வருகிறது” என்று சாடியுள்ளார்.

தீபாவளிக்குப் பிறகு மோசமடைந்த சுற்றுச்சூழல் நிலவரம் குறித்து சேவாக் முன்பு ட்வீட் செய்த போது, “பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது, பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் இது மிகவும் சகஜமாக நிகழ்கிறது. காற்றில் மாசு, சூழல் நாசகேடு விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x