Published : 29 Nov 2017 01:09 PM
Last Updated : 29 Nov 2017 01:09 PM

தொழிலாளர்களிடையே பாலின சமநிலை அவசியம்: இவாங்கா வலியுறுத்தல்

தொழிலாளர்களிடையே பாலின சமநிலை அவசியம், பாலின பாகுபாட்டை சரி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் கூறினார்.

ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள எச்ஐசிசி வளாகத்தில் 3 நாள் சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினரா அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் கலந்து கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று பெண்கள் தொழில்முனைவோர் தொடர்பான அமர்வு நடைபெற்றது. தெலுங்கானா மாநில ஐ.டி.,த்துறை அமைச்சர் கே.டி ராமராவ் தலைமையில் நடந்த இந்த அமர்வில் இவாங்கா கலந்து கொண்டு பேசியதாவது:

‘‘எந்த ஒரு அரசும் திட்டங்களை தீட்டம் போதும், பெண் தொழில்முனைவோர ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும். பெண் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சரியான பிரதிநிதித்துவுமும், நிதி பரவலாக்கலும், தொழிலுக்கு பயன் தரும். தொழிலாளர்களிடையே பாலின சமநிலையை சரி செய்வது சமூக ரீதியாக மட்டுமின்றி, நிதிசார்ந்தும் தேவையான ஒன்று. ‘ஸ்டெம்’ உள்ளிட்ட சில துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிக குறைவாகவே உள்ளது. அந்த துறைகளில் பெண்கள் அதிகமளவு இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

இதை தொடர்நது, ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் பேசியதாவது:

‘‘எங்கள் வங்கியின் சார்பில் ஒரு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தோம். அவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். ஆண் ஒருவருக்கு அளிக்கும் பயிற்சி தனிநபருக்கு அளிக்கும் பயிற்சி. பெண்ணுக்கு அளிக்கும் பயிற்சி ஒரு தலைமுறைக்கு அளிக்கும் பயிற்சி. கல்வி, ஊக்கம், அதிகாரமளித்தல் இவை தான் பெண்களுக்கு மிகவும் தேவையானவை.

இந்தியாவில் பல துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர்,. ஆண்கள் கோலோச்சும் பளுத்தூக்கும் போட்டி உள்ளிட்டவற்றிலும் பெண்கள் இந்தியாவில் சாதி்கின்றனர். விமான பைலட்டுகளாகவும், கடற்படையிலும் பெண்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். அமைச்சர்கள் பலர் பெண்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் கூட பெண். வங்கித்துறையில் 40 சதவீதத்திற்கு மேல் பெண்கள் உள்ள ஒரே நாடு இந்தியா தான்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x