Published : 14 Jul 2023 05:20 PM
Last Updated : 14 Jul 2023 05:20 PM

இந்திய விண்வெளி சாகசத்தில் ‘சந்திரயான்-3’ புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாரிஸ்: இந்திய விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயம் சந்திரயான்-3 என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை அங்கிருந்தவாறே பிரதமர் கவனித்து வந்தார்.

இந்நிலையில், "இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது. அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

முன்னதாக, பிரதமர் மோடி இன்று காலை பதிவிட்டிருந்த ட்வீட்டில், "சந்திரயான்-3 நிலவு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் இன்றைய நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்த விண்கலம் நமது தேசத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்லும் " என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x