Last Updated : 14 Jul, 2023 03:30 PM

42  

Published : 14 Jul 2023 03:30 PM
Last Updated : 14 Jul 2023 03:30 PM

முஸ்லிம் நடத்துநரின் குல்லாவை அகற்றவைத்த பெண் பயணி @ பெங்களூரு | வைரலான வீடியோ

பெங்களூரு: பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெங்களூர் மாநகர அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்து ஒன்றில் பணிபுரியும் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் அவரது மத வழக்கப்படி தலையில் குல்லா அணிந்திருக்கிறார். அதனைக் கண்ட ஒரு பெண் பயணி ஒருவர், ''பணி நேரத்தின்போது தொப்பி அணியலாமா? இது உங்கள் சீருடை தொடர்பான விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? எதற்காக தொப்பி அணிந்திருக்கிறீர்கள்?'' என கேட்கிறார்.

அதற்கு அந்த நடத்துநர், ‛‛நான் நீண்ட காலமாக அணிந்து வருகிறேன். பணி நேரத்தில் இதனை அணியலாம் என நினைக்கிறேன்'' என்று பதிலளிக்கிறார். அதற்கு அந்தப் பெண், ‛‛உங்களின் மதம் சார்ந்த விஷயங்களை வீட்டிலும், மசூதியிலும் பின்பற்றி கொள்ளுங்கள். பணியின்போது இதுபோன்று தொப்பி அணியாதீர்கள். இதனை நான் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு செல்கிறேன்'' என்கிறார்.

அதற்கு நடத்துநர், ‛‛நான் இவ்வாறு தொப்பி அணிந்ததற்கு இதுவரை யாரும் ஆட்சேபிக்கவில்லை. நானும் உயரதிகாரிகளிடம் கேட்கிறேன்'' என்றார். அதற்கு பெண், ''சட்ட விதிமுறைகளில் இல்லாவிட்டால் தொப்பியை கழற்றி விடுங்கள்'' எனக்கூறினார். இதையடுத்து அந்த முஸ்லீம் நடந்துநர் தனது தலையில் இருந்து தொப்பியை கழ‌ற்றினார்.

இந்தச் சம்பவத்தின் முழு வீடியோவையும் அந்த பெண் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஏராளமானோர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரு மாநகர போலீஸார், போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் இந்தச் சம்பவம் நடந்த இடம், பேருந்து உள்ளிட்ட விவரங்களை தருமாறு கடிதம் எழுதியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x