Published : 15 Jun 2023 04:36 AM
Last Updated : 15 Jun 2023 04:36 AM

இந்தியா–மியான்மர்–தாய்லாந்தை இணைக்கும் நெடுஞ்சாலை: 4 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்

கொல்கத்தா: இந்தியா–மியான்மர்–தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்பு இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய தொழில் மற்றும்வர்த்தக சபை (சிஐஐ) வணிக மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது. இந்நிகழ்வில் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சகர்கள் பங்கேற்றனர்.

கொல்கத்தா வரை: இந்தியா–மியான்மர்–தாய்லாந்தை இணைக்கும் முத்தரப்பு தேசிய நெடுஞ்சாலை குறித்து இந்நிகழ்வில் பேசப்பட்டது. 2,800 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த நெஞ்சாலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தொடங்கி இந்தியாவில் கொல்காத்தாவில் முடிவடைகிறது.

2,800 கி.மீ. தூரம்: இந்தத் திட்டம் குறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கூறுகையில், “மொத்தம் இந்த சாலையின் தூரம் 2,800 கிமீ ஆகும். இதில் 2,500 கிமீ இந்தியா மற்றும் மியான்மரில் அமைகிறது. குறைந்த தூரமேதாய்லாந்தில் அமைகிறது. இதனால், தாய்லாந்தில் சாலைஅமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. இந்தத் திட்டம் முழுமை பெற இந்தியா மற்றும் மியான்மரில் மீதமுள்ள தூரத்துக்கு சாலை அமைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். மியான்மர் நாட்டின் வர்த்தக அமைச்சர் கூறுகையில், “இந்த நெடுஞ்சாலை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தயாராகிவிடும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x