Last Updated : 03 Oct, 2017 11:07 AM

 

Published : 03 Oct 2017 11:07 AM
Last Updated : 03 Oct 2017 11:07 AM

உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலா துறை கையேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்

பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசின் சுற்றுலா துறையின் கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களை சுட்டிக்காட்டும் கையேட்டில் இருந்து உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது.

'எண்ணிலடங்கா சாத்தியங்கள்' (Boundless Possibilities) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கையேட்டில், தாஜ்மஹாலைத் தவிர மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மையங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அந்தக் கையேட்டில் வாரணாசியின் கங்கா ஆரத்தி படத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத், சுற்றுலா அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. உட்பக்கங்களில் புனித தலங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக இருக்கும் கோரக்பீத் சுற்றுலா தலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ராமாயணமும், மகாபாரதமுமே இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றனவே தவிர தாஜ்மஹால் அல்ல" எனக் கூறினார். அவரது இக்கருத்து பரவலாக சர்ச்சையைக் கிளப்பியது.

இதனையடுத்து அம்மாநில சுற்றுலா அமைச்சர் ரீட்டா பகுகுணா, "உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை வழங்குகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x