‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் திரையிடல் தொடங்கியது!

‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் திரையிடல் தொடங்கியது!
Updated on
1 min read

தமிழ்​நாட்​டின் அரிய கானுயிர்​கள் மற்​றும் பல்​லு​யிர்ச் சூழல் ஆகிய​வற்​றைப் பிரம்மாண்​ட​மாகக் காட்​சிப்​படுத்​தி​யுள்ள ‘வைல்டு தமிழ்​நாடு’ என்ற ஆவணப்​படத்​தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இதை நாடு முழு​வதும் உள்ள பி.​வி.ஆர் மற்​றும் ஐநாக்ஸ் திரையரங்​கு​களில் பொது​மக்கள் காணலாம்.

காப்​புக் காடு​கள், அவற்​றின் அரணாக விளங்​கும் மேற்​குத் தொடர்ச்சி மலை, வளம் மிக்க சமவெளி, வறண்ட பாலை, மீன்​வளம் மிக்க நீண்ட பெரும் கடற்​கரை என தமிழ்​நாட்​டின் ஐந்​திணை நிலங்​களில் வாழும் உயி​ரினங்​களை பொது​மக்​கள் இது​வரை பார்த்​திராத கோணத்​தில், அரிய தகவல்​களு​டன், மிக அண்மை காட்​சிப் பதிவு​களாகக் கண்​டுணரும் வகை​யிலும் இந்த ஆவணப்​படத்தை 4 ஆண்​டு​கள் காத்​திருந்து உரு​வாக்​கி​யுள்​ளனர்.

சென்​னையைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கும் சுந்​தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறு​வனம் தனது சமூகப் பொறுப்​புணர்​வுத் திட்​டங்​களின் வழி​யாகப் பல்​வேறு சமூகப் பணி​களை முன்​னெடுத்து வரு​கிறது.

அந்த வரிசை​யில், தமிழ்​நாட்​டுக்​குப் பெருமை சேர்க்​கும் வித​மாக, வருங்​காலத் தலை​முறைக்கு நமது பல்​லு​யிர் வளங்​களைக் காக்க வேண்​டிய பொறுப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில், காட்சி ஆவண​மாக ‘வைல்டு தமிழ்​நாடு’, சிறந்த காட்சி அனுபவத்தை வழங்​கு​கிறது. ஒரு மணி நேர ஆவணப்​பட​மான இதை, ‘நேச்​சர் இன்ஃ​போகஸ்’ நிறு​வனத்​துடன் இணைந்​து, தமிழ்​நாடு வனத்​துறை​யின் ஒத்​துழைப்​புடன் பெரும் பொருட்செல​வில் சுந்​தரம் ஃபாஸனர்ஸ் இதைத் தயாரித்​துள்​ளது.

சுவாரஸிய​மான திரைப்​படத்​துக்கே உரிய கதை சொல்​லலுடன் இப்படத்தை இயக்​கி​யிருக்​கிறார், இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்​குந​ரான கல்​யாண் வர்​மா. இப்​படத்​துக்​கு நடிகர் அரவிந்த் சுவாமி, வர்​ணனை கொடுத்​துள்​ளார். 3 முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்​நாடக இசையை​யும் மேற்​கத்​திய வாத்தியங்​களை​யும் நேர்த்​தி​யாக இணைத்து பின்​னணி இசையை அமைத்​துள்​ளார்.

இப்​படத்​தைக் காணும்​போது, இவை நம்​முடைய விலங்​கு​களும் பறவை​களுமா என வியந்​து​போகும் வகை​யில் அரிய விலங்​கு​கள், பறவை​கள் உள்​ளிட்​ட​வற்​றின் வாழ்க்​கைப் பக்​கங்​களைக் கண்டு வியக்​கலாம். நாடு முழு​வதும் 30-க்​கும் குறை​யாத திரையரங்​கு​களில் இப்​படத்​துக்​கான திரை​யிடல் நேற்று முதல் தொடங்​கி​யுள்​ளது.

‘வைல்டு தமிழ்​நாடு’ ஆவணப்பட முன்​னெடுப்பு குறித்து சுந்​தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஆரத்தி கிருஷ்ணா கூறும்​போது, “நமது இயற்கை பாரம்​பரி​யத்​தைப் போற்​றிப் பாது​காக்​கும் இது​போன்ற நேர்த்​தி​யான சிறந்த முயற்​சிகளுக்கு ஆதர​வளிப்​ப​தில் சுந்​தரம் ஃபாஸனர்ஸ் நிறு​வனம் ஆர்​வம் கொண்​டுள்​ளது. நமது பல்​லு​யிர்ச் சூழல் மீது ஆழ்ந்த அன்​பை​யும், அதைப் பாது​காக்க வேண்​டியதன் அவசி​யத்​தை​யும் இப்​படம் மக்​களின்​ மனதில்​ உரு​வாக்​கும்​ என்​று நம்​பு​கிறோம்​” என்​றார்​.

‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் திரையிடல் தொடங்கியது!
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in