வேடந்தாங்கலில் வறண்டு காணப்படும் ஏரி: உணவுக்காக வேறு நீர் நிலைகளை தேடிச் செல்லும் பறவைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள பறவைகள்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள பறவைகள்.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: வேடந்​தாங்​கல் சுற்​றுப்​புறப் பகுதி​களில் கனமழை பெய்​தும், பறவை​கள் சரணாலய ஏரிக்கு நீர்​வரத்து இல்​லாமல் வறண்டு காணப்​படு​கிறது.

இத​னால் மரக்​கிளைகளில் சிறிய அளவில் கூட்​டம், கூட்​ட​மாக அமர்ந்​துள்ள பறவை​கள், உணவுக்​காக அரு​கில் உள்ள நீர் நிலைகளைத் தேடிச் செல்​லும் நிலை உள்ளது.

வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ள​தால், தமிழகத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களி​லும்விட்டு, விட்டு மழை பெய்து வரு​கிறது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மதுராந்​தகம், கருங்​குழி, வேடந்​தாங்​கல் மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகுதி​களில் மழை பெய்​தும், ஏரி​களுக்கு நீர்​வரத்து இல்லை.

இத​னால் சுற்​றுப்​புற கிராமங்​களில் உள்ள ஏரி​கள் வறண்டு காணப்​படு​கின்​றன. வழக்​க​மாக ஒவ்​வோர் ஆண்​டும் வடகிழக்கு பரு​வ​மழைக் காலத்​தில் பறவை​கள் சரணாலயத்​தில் உள்ள ஏரிக்கு நீர்​வரத்து அதி​களவில் இருக்​கும்.

ஆனால் தற்​போது பரு​வ​மழை தொடங்கி வேடந்​தாங்​கல் சுற்​றுப்​புறப் பகுதி​களில் மழை பெய்​தும் ஏரிக்கு நீர்​வரத்து இல்​லாததால் ஏரி வறண்ட நிலை​யி லேயே உள்​ளது.

இந்​நிலை​யில், ஏரி​யில் உள்ள மரங்​களில் ஆங்​காங்கே உள்ள பறவை​கள் உணவுக்​காக வேறு இடங்​களைதேடிச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இத​னால் வழக்​க​மான சீசன் தொடங்​கிய​தாகக் கருதி பறவை​களைக் கண்டு ரசிக்க வரும் சுற்​றுலாப் பயணிகளும், பறவை ஆர்​வலர்​களும் ஏமாற்​றம் அடைந்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள பறவைகள்.</p></div>
விமானத்தில் அவசரகால கதவை திறக்க பயணி முயற்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in