விமானத்தில் அவசரகால கதவை திறக்க பயணி முயற்சி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் இருந்து நேற்று முன்​தினம் இரவு புறப்​பட்ட இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் சென்​னை​யில் தரையிறங்க தொடங்​கியது.

அந்த விமானத்​தில் 142 பயணிகள் இருந்​தனர். அந்த நேரத்​தில், விமானத்​தின் அவசரகால கதவை திறக்க யாரோ முயற்​சிப்​ப​தாக விமானி​யின் கேபினுள் எச்​சரிக்கை மணி ஒலித்​தது.

அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்​கள், அவசரகால கதவை திறக்க முயற்​சித்த நபரை விமான நிலைய பாது​காப்பு அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில், தெலங்​கானாவைச் சேர்ந்த சைலம் (40) என்பவர் சென்​னை​யில் வியாபாரம் செய்து வரு​வ​தாகவும், அவசரகால கதவு அருகே அமர்ந்​திருந்த போது, தெரியாமல் அவசரகால கதவை திறக்​கும் பட்​டனை அழுத்​தி​ய​தாகவும் தெரி​வித்​தார்.

அவரது விளக்​கத்தை ஏற்க மறுத்த அதி​காரி​கள், அவரை சென்னை விமான நிலைய போலீசா​ரிடம் ஒப்​படைத்​தனர். அவரிடம் போலீசார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in