Published : 11 Mar 2021 01:13 PM
Last Updated : 11 Mar 2021 01:13 PM

79 - சங்கராபுரம்

கல்வராயன் மலை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ராஜா(பாமக) அதிமுக
தா.உதயசூரியன் திமுக
முஜிபுர் ரஹமான் அமமுக
ஜி.ரமேஷ் மக்கள் நீதி மய்யம்
சு.ரஜியாமா நாம் தமிழர் கட்சி

1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கல்வராயன்மலை ஒன்றியம், சின்னசேலம் ஒன்றியம், சங்கராபுரம் வடக்கநந்தல் பேரூராட்சிகள் உள்ளடக்கியதாகும். இதில் கல்வராயன் மலை ஏழைகளின் மலை வாசஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது. மலைவாழ் பழங்குடியினர்களின் பூர்வீக வாழ்விடமாக இன்றும் திகழ்கிறது. கல்வராயன் மலை விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் இந்த மலையை பழங்குடியினருக்கு வழங்கியதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கல்வராயன் மலை இத்தொகுதியை சேர்ந்ததாகும். இங்கு பெரியார் அருவி,மேகம் அருவி, சிருக்களூர் அருவி, கவியம் அருவி, மாய அருவி என 5க்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளது. சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இதில் வடக்கநந்தல் பேரூராட்சி மற்றும் சின்னசேலம் பேரூராட்சி சங்கராபுரம் ஒன்றியம் பகுதிகளை உள்ளடக்கியது.

இந்த சங்கராபுரம் தொகுதி கல்வராயன்மலை 165 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதி.

தொகுதி மக்களின் கோரிக்கைகள்

கல்வராயன் மலைப்பகுதியை கொண்ட சங்கராபுரம் தொகுதியில் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வனப் பகுதிகளில் சாலை அமைத்து தரவேண்டும், வனத்துறையினர் கெடுபிடிகளை தளர்த்தவேண்டும், போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை நீண்ட காலமாக இருந்த வந்த போதிலும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இடைத்தரகர்களின் காட்டும் பணத்தாசையால், செம்மரம் வெட்டும் தொழிலுக்குச் சென்று சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் நிலவுகிறது.

பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்குவதில் வருவாய் துறையினரின் அலைக்கழிப்பால் அவர்களது பிள்ளைகள் கல்வி கற்பதில் சிக்கல் உருவாகியிருப்பதாகவும், அதை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கேவண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

தேர்தல் வரலாறு

இந்தத் தொகுதியில் 1962 -ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்த்தசாரதி,1967-ல் திமுகவைச் சேர்ந்த பச்சையப்பன்,1971-ல் திமுகவைச் சேர்ந்த நாச்சியப்பன், 1977-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துரை.முத்துச்சாமி,1980 மற்றும் 1984-ல் அதிமுகவைச் சேர்ந்த கலிதீர்த்தான்,1989-ல் திமுகவை சேர்ந்த முத்தையன்,1991- ல் அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி,1996-ல் திமுகவைச் சேர்ந்த உதய சூரியன்,2001-ல் பாமகவைச் சேர்ந்த காசாம்பூ பூமாலை, 2006-ல் திமுகவைச் சேர்ந்த அங்கயற்கண்ணி,2011-ல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகன், 2016-ல் திமுகவைச் சேர்ந்த உதயசூரியன் ஆகியோரும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4 முறையும் திமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் முந்நூறு வாக்குச்சாவடிகள் உள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,33,498

பெண்

1,34,380

மூன்றாம் பாலினத்தவர்

48

மொத்த வாக்காளர்கள்

2,67,926

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ப. மோகன்

அதிமுக

2

டி. உதயசூரியன்

தி.மு.க

3

ஆர். கோவிந்தன்

தேமுதிக

4

எஸ். சிவராமன்

பாமக

5

சாரதி

ஐஜேகே

6

சங்கர்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சங்கராபுரம் வட்டம் (பகுதி) கூடாரம், ஆலனூர், குரும்பளூர், மூலக்காடு, வாழக்குழி, வஞ்சிக்குழி (பி), சிறுக்களூர் (பி), சேராப்பட்டு, பெருமாநத்தம் (பி), கிளாக்காடு (பி), கள்ளிப்பாறை, வில்வத்தி, பாச்சேரி, பெரும்பூர், புத்திராம்பட்டு, மூக்கனூர், சிவபுரம், உலகுடையாம்பட்டு, சிட்டாந்தாங்கல், ஊராங்கணி, பூட்டை, பூட்டை (ஆர்.எஃப்), அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, வெள்ளரிக்காடு, வெங்கோடு (பி), கீழ்நிலவூர், மேல் நிலவூர், அரவங்காடு, மணியர்பாளையம் (பி), பன்ன்ப்பாடி (பி), கள்ளிப்பட்டி, கொசப்பாடி, செம்பராம்பட்டு (பி), தியாகராஜபுரம், சௌந்தரவள்ளிபாளையம், தேவபாண்டலம், அக்ரஹார பாண்டலம், குளத்தூர், வரகூர், அரசராம்பட்டு, விரியூர், செல்லகாகுப்பம், திம்மநந்தல், அரூர், கிடங்குடையாம்பட்டு, வட சிறுவள்ளுர், போய்குணம், கருவேலம்பாடி (பி), நொச்சிமேடு (பி), மாவடிப்பட்டு, கரியாலூர் (பி), மொழிப்பாட்டு, வெள்ளிமலை, வேழப்பாடி, கொண்டியாநத்தம், சேஷசமுத்திரம், நெடுமானூர், சோழம்பட்டு, வடசெட்டியந்தல், இராமராஜபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பத்து, பழையனூர், கல்லேரிக்குப்பம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், முரார்பாத், மல்லியம்பாடி, கண்டிக்கல், மோ.வன்னஞ்சூர், ஆரம்பூண்டி (பி), உப்பூர் (பி), எருக்கம்பட்டு, வண்டகப்பாடி (பி), தொரடிப்பட்டு (பி), முண்டியூர், பொட்டியம் (பி), திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு, ஆலத்தூர், அகரக்கோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், தண்டலை, வாணியந்தல், அரியபெருமானூர், வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மோகூர், அலம்பலம் (கள்ளக்குறிச்சி), செம்படாக்குறிச்சி, செம்படாக்குறிச்சி, நாரணம்பட்டு (பி), மேல் பாச்சேரி, எழுத்தூர், தொரங்கூர், மல்லாபுரம் மற்றும் வாரம் (பி) கிராமங்கள். சங்கராபுரம் (பேரூராட்சி), கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) செல்லம்பட்டு, கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், மாத்தூர், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஏருவாய்ப்பட்டணம், கடத்தூர், பாதரம்பள்ளம் (1), தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்ட்யநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம், மரவாநத்தம் மற்றும் வெட்டிப்பெருமாள் அகரம் கிராமங்கள்.

வடக்கனத்தல் (பேரூராட்சி) மற்றும் சின்னசேலம் (பேரூராட்சி).

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1962

பார்த்தசாரதி

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

பச்சையப்பன்

திமுக

1971

நாச்சியப்பன்

திமுக

1977

துரை.முத்துசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

கலிதீர்த்தன்

அதிமுக

1984

கலிதீர்த்தன்

அதிமுக

1989

முத்தையன்

திமுக

1991

ராமசாமி

அதிமுக

1996

உதயசூரியன்

திமுக

2001

காசாம்புபூமாலை

பாமக

2006

அங்கயற்கன்னி

திமுக

2011

ப.மோகன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. அங்கையார்கன்னி

தி.மு.க

62970

2

P. சன்னியாசி

அ.தி.மு.க

60504

3

R. செழியன்

தே.மு.தி.க

14773

4

C. அன்னம்மாள்

சுயேச்சை

2343

5

C. பூபதி

பி.எஸ்.பி

1473

6

V. ஐயாத்துரை

சுயேச்சை

1269

7

S. ஐயாக்கண்ணு

எஸ்.பி

804

8

J. ராஜ்குமார்

பி.ஜே.பி

708

144844

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. மோகன்

அ.தி.மு.க

87522

2

T. உதயச்சூரியன்

தி.மு.க

75324

3

S. வெங்கடேசன்

சுயேச்சை

1933

4

K. ஜெயவர்மன்

பி.ஜே.பி

1874

5

P. குமார்

பி.எஸ்.பி

1492

6

S. மோகன்

சுயேச்சை

745

7

M. குணசேகர்

ஐ.ஜே.கே

579

8

A. வெங்கடேசன்

சுயேச்சை

537

9

C. ஆனந்த தாஸ்

எல்.ஜே.பி

444

10

K. சேகர்

சுயேச்சை

374

170824

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x