Published : 17 Mar 2019 01:41 PM
Last Updated : 17 Mar 2019 01:41 PM
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது. இரட்டை இலையில் நிற்கச் சொன்னார்கள். முடியாது என்று சொல்லிவிட்டேன்’ என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியையும் நடத்தி வருகிறார்.
இன்று 17.3.19ம் தேதி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து டி.ராஜேந்தர் தெரிவித்ததாவது:
கட்சிப் பொறுப்பாளர்களிடம் விவாதித்ததில், அவர்கள் விருப்ப மனுவை கொடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே இந்தத் தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன.
நான் சாணக்கியன். அதனால்தான் எதையும் யோசித்து முடிவெடுக்கிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி என்னை கூட்டணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டது. (அப்போது, எந்தக் கட்சி அழைத்தது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்).
நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது. இரட்டை இலையில் நிற்கச் சொன்னார்கள். எனக்கு அப்படி நிற்பதில் விருப்பமில்லை. முடியாது என்று சொல்லிவிட்டேன்.
அப்படியெனில் ராஜ்யசபா சீட் தருகிறோம். பிரச்சாரம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். எனக்கு அதிலும் உடன்பாடு இல்லை. மறுத்துவிட்டேன்.
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT