Published : 27 Mar 2019 12:16 PM
Last Updated : 27 Mar 2019 12:16 PM
மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கமளித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தவளக்குப்பம் கிராமத்தில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (புதன்கிழமை) தொடங்கினார். நாஞ்சில் சம்பத்துடன், காங்கிரஸ் - திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று ஒரு நாள் முழுவதும் புதுச்சேரியில் 11 இடங்களில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
பிரச்சாரத்தை தொடக்கி வைத்து மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கமித்து பேசியதாவது:
கட்சி அரசியலில் இருந்து விலகி, கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால், நான் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன்.
ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோடி ஊழல் செய்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்படுத்திவிட்டார் மோடி. மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.
புதுச்சேரியில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருகிறார். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT