Published : 16 Mar 2019 01:48 PM
Last Updated : 16 Mar 2019 01:48 PM
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதன் டெல்லி தலைமை மூலம் அதிக அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் போராடி தொகுதியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் போட்டியிட வாய்ப்பு பணம் படைத்தவருக்கா அல்லது கட்சிக்கு உழைத்தவருக்கா என்ற கேள்வி திமுகவினரிடையே எழுந்துள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியினர் டெல்லி தலைமை மூலம் அந்த தொகுதியை பெற காய் நகர்த்தினர். காங்கிரசில் முக்கியப் பிரமுகர் ஒருவர் போட்டியிடுவதற்காகத்தான் அக்கட்சி அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம், திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதி களில் ஜெயலலிதா இருந்தபோதே நான்கு தொகுதி களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. மேலும் தற்போது நிலக்கோட்டை தொகுதி காலியாகவுள்ளது.
ஒரு தொகுதி மட்டுமே அதிமுக வசம் உள்ளது. எனவே, திமுக எளிதாக வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில், திண்டுக்கல்லை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என எடுத்துக் கூறினர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரி யசாமி, திமுக கொறடா அர.சக்கரபாணி ஆகியோர்அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தொகுதிகளை இறுதி செய்வதில் திமுக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தது.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளின் ஒட்டுமொத்த குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் திண்டுக்கல்லில் திமுக வேட்பாளரை நிறுத்த கட்சித் தலைமை முடிவு செய்து அறிவித்துள்ளது. இத னால், உள்ளூர் திமுகவினர் உற்சாகம டைந்துள்ளனர்.
இத்தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பலர் விண்ணப்பத்திருந்தபோதும், செலவுக்கு பயந்து சிலர் பின்வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
பணமா, உழைப்பா?
மற்றொருபுறம், கட்சிக்காக அடி மட்டத்தில் இருந்து உழைத்து பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன்.
தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளேன் எனவே எனக்கு தான் சீட் தர வேண்டும் என சாணார்பட்டி விஜயன் என்பவர் முயற்சி எடுத்து வருகிறார். இருவரில் யார் வாய்ப்பு பெறப்போகிறார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.திமுக தலைமை பணத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறதா அல்லது கட்சிக்கு உழைத்தவருக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறதா என திண்டுக்கல் மாவட்ட திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT