Published : 17 Mar 2019 11:40 PM
Last Updated : 17 Mar 2019 11:40 PM

20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:தேனியில் ஓபிஎஸ் மகன் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. ஓபிஎஸ் மகன் தேனி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக முனைப்பு காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன.

திமுக சார்பில் அதன் வேட்பாளர்களை இன்று ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இன்று வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் அதிமுக தலைமை அலுவலத்தில் கூடியிருந்தனர். ஆனால் யாரும் செய்தியாளர்களை சந்திக்க வில்லை. இந்நிலையில் திடீரென அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிக்கையாக வெளியாகியுள்ளது.

20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் என தனித்தனியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வருமாறு:

திருவள்ளூர்- டாக்டர் வேணுகோபால்

சென்னை- தெற்கு ஜெயவர்த்தன்

காஞ்சிபுரம்- தனி மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி- கே.பி. முனுசாமி

திருவண்ணாமலை- அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆரணி- செஞ்சி .வெ. ஏழுமலை

சேலம்- கே.ஆர்.எஸ்.சரவணன்

நாமக்கல்- பி.காளியப்பன்

ஈரோடு- வெங்கு (என்கிற) ஜி.மணிமாறன்

திருப்பூர்- எம்.எஸ்.எம்.ஆனந்தன்

நீலகிரி- (தனி) எம்.தியாகராஜன்

பொள்ளாச்சி- சி.மகேந்திரன்

கரூர்- தம்பிதுரை

பெரம்பலூர்- என்.ஆர்.சிவபதி

சிதம்பரம் (தனி)- பொ.சந்திரசேகர்

மயிலாடுதுறை- எஸ்.எஸ்.மணி

நாகப்பட்டினம்- தாழை.மா.சரவணன்

மதுரை- ராஜ்.சத்யன் சத்யன்

தேனி- ரவீந்திரநாத் குமார்

திருநெல்வேலி- பி.எச்.மனோஜ் பாண்டியன்

அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களாக கிருஷ்ணகிரியில் கே.பி முனுசாமியும், தேனியில் ரவீந்திரநாத் குமார், நெல்லையில் மனோஜ் பாண்டியன், கரூரில் தம்பிதுரையும், திருப்பூரில் ஆனந்தனும் தென்சென்னையில் ஜெயவர்தனும் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிரணியினருக்கு கடுமையான சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x