Published : 19 Mar 2019 11:30 am

Updated : 19 Mar 2019 11:30 am

 

Published : 19 Mar 2019 11:30 AM
Last Updated : 19 Mar 2019 11:30 AM

தேர்தல் என்ற திருமண விழாவில் நாம் பெண் வீட்டார்: கட்சியினரை சமாதானப்படுத்தும் பாஜக

தேர்தல் என்ற திருமண விழா வில் நாம் பெண் வீட்டார்கள் போன்றவர்கள். நமது கூட்டணிக் கட்சிகள் மாப்பிள்ளை வீட்டார் போன்றவர்கள். இந்தத் தேர்தலில் விட்டுக் கொடுத்துப் பணியாற் றினால் `மீண்டும் மோடி' என்ற குறிக்கோளை நாம் அடையலாம் எனக் கூறி தொண்டர்களைச் சமாதானப்படுத்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் கட்சித் தலைமை பல மாதங்களுக்கு முன்பே தொண்டர்களை களம் இறக்கி பிரச்சாரத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடந்த 3 மாதங்களாக பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தீவிரக் களப்பணியாற்றினர்.


கிராம, நகர, ஒன்றிய அளவில் கட்சி நிர்வாகிகளுக்கான குழுக்களை அமைத்து சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திரம் எனப் பெயரிட்டு தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

குறிப்பாக பூத் வாரியாக குழுக்கள் அமைத்து வாக்காளர்கள் யாரும் விடுபடாத வகையில் அவர் களை வீடுவீடாகச் சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்து பாஜகவுக்கான வாக்கு வங்கியைப் பலப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயலாற்றினர்.

அதோடு, கட்சியினரை ஊக்கப் படுத்தும் வகையில் கடந்த ஜன வரி மாதத்தில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலும் கேந்திர நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் நடத்தியதோடு, அவர் களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உற்சாகப் படுத்தினார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூடுதல் பலத்தோடு இம்முறை `மீண்டும் மோடி' என்ற முழக்கத்துடன் பாஜகவினர் விறுவிறுப்பாக களப்பணி ஆற்றத் தொடங்கினர்.

அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கோவை, கன்னியாகுமரி, தூத்துக் குடி, ராமநாதபுரம், சிவகங்கை என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், எதிர்பார்த்த எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப் தியில் பாஜகவினர் உள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரில் நடைபெற்ற மதுரைக் கோட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியதாவது:

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட் டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். `மீண்டும் மோடி' என்பதே நமது குறிக்கோள். கூட் டணியில் குறைந்த இடங்கள்தான் கிடைத்துள்ளன என நினைத்து வருத்தப்பட வேண்டாம். தேர்தல் என்ற திருமண விழாவில் நாம் பெண் வீட்டார்கள் போன்றவர்கள். நாம் இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணிக் கட்சிகள் மாப்பிள்ளை வீட்டார் போன்றவர்கள். இந்தத் தேர்தலில் விட்டுக் கொடுத்துப் பணியாற்றினால் நமது குறிக் கோளை அடையாளம்.

மோடியை மீண்டும் பிரதமராக்க நாம் பணியாற்றுகிறோம். நம் மோடு மேலும் பலர் பணியாற்ற வருகின்றார்கள் என்றால் நமக்கு மகிழ்ச்சிதானே. கூடுதல் பலம் கிடைக்கும் இல்லையா, என்றார்.

பாஜகவின் இந்தத் தேர்தல் வியூகம் எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்பது வாக்கா ளர்களின் கைகளில்தான் உள்ளது.


மக்களவைத் தேர்தல்பெண் வீட்டார்பாஜகபாஜக சமாதானம்பெண் வீட்டார்கள்மீண்டும் மோடிதொண்டர்களைச் சமாதானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x