Published : 24 Mar 2019 06:09 AM
Last Updated : 24 Mar 2019 06:09 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல ஏழைகளுக்கு டோக்கன் கொடுத்து இனி ஏமாற்ற முடியாது: வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உறுதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல, ஏழை மக்களுக்கு டோக்கன் கொடுத்து இனிமேல் ஏமாற்ற முடியாது என்று வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட சென்னை மக்களவைத் தொகுதி யில் தேமுதிகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அழகாபுரம் மோகன் ராஜ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்து, அடுத்தகட்ட மாக கூட்டணி கட்சிகளுடன் பிரச் சாரத்துக்கும் தயாராகிவிட்டார்.

இந்நிலையில், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

சேலத்தில் தேர்தல்களை சந்தித்த நீங்கள் சென்னையில் முதல்முறையாக போட்டியிடு வதை எப்படி உணர்கிறீர்கள்?

சேலம் முதல்வர் தொகுதி என்ப தால், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், சென்னையும் எனக்கு புதிது அல்ல. கடந்த 2004 முதல் சென்னையில் தான் வசிக்கிறேன். தேமுதிகவின் மாநில நிர்வாகியாக கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி களோடு இணைந்து தேர்தல் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வாரா?

விஜயகாந்தை தொலைக்காட்சி யில் பார்த்தாலே தொண்டர்கள் உற்சாகமாகி விடுவார்கள். தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில் வட சென்னையில் விஜயகாந்த் பிரச் சாரம் செய்வார். அதற்கு முன்ன தாக 25-ம் தேதி முதல்வர் பழனி சாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா என்னை ஆதரித்து மக்களிடம் ஆதரவு திரட்ட இருக் கிறார்.

வடசென்னை மக்களுக்கு நீங்கள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

தொழிலாளர்கள் நிறைந்துள்ள தொகுதி என்பதால் இங்குள்ள மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு மூலம் புதிய தொழிற் சாலையை கொண்டு வருவேன். ராயபுரத்தில் 3-வது ரயில் முனையம், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்.

உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பாஜக அரசு மூலம் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆரம் பத்தில் சிறிது தொய்வு இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அந்த திட்டங்கள் தற்போது பலனளிக்கத் தொடங்கிவிட்டன. முத்ரா வங்கிக் கடன் திட்டம், வீட்டு வசதி திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் போன்ற பாஜகவின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

அதிமுகவை தொடர்ந்து விமர் சித்த கட்சி தேமுதிக. இப்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர் கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா?

தேர்தல் களத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இம்மியளவுகூட கருத்து வேறுபாடு இல்லாமல் பணியாற்றுகின்றனர்.

ஆளும்கட்சியாக இருக்கும்போதே ஆர்.கே.நகரில் அதிமுக தோல் வியை தழுவியது. அந்த சட்டப் பேரவை தொகுதியை உள்ளடக் கிய மக்களவை தொகுதியில் எப்படி தைரியமாக போட்டியிடுகிறீர்கள்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். டோக் கன் கொடுத்து இனியும் ஏழை மக்களை ஏமாற்ற முடியாது. அவர் களை நம்பி தொகுதி மக்கள் ஏமாந்துவிட்டனர். இனியும் அவர் கள் ஏமாற மாட்டார்கள். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x