Last Updated : 09 Apr, 2019 11:59 AM

 

Published : 09 Apr 2019 11:59 AM
Last Updated : 09 Apr 2019 11:59 AM

தேர்தல் களம் 2019; ஒடிசா: பாஜக கால்பதிக்க முயலும் மாநிலம்

மக்களவை தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும் மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. மாநில கட்சியான பிஜூ ஜனதாதளம் வலிமையாக உள்ள மாநிலம். தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள பிஜூ ஜனதாதளம் வலிமையான வாக்கு வங்கியை கொண்ட கட்சி.

ஒடிசா மக்களின் உள்ளூர் குரலை ஓங்கி ஒலிக்கும் பிஜூ ஜனதாதளம் தொடர்ந்து பல தேர்தல்களில் தனது முத்திரையை பதித்து வருகிறது. தமிழகம், மேற்குவங்கம் போல கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் அலை வீசாமல் உள்ளூர் அலை வீசிய மாநிலம் ஒடிசா. 26 சதவீத வாக்குகளை பெற்ற போதிலும் காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் 21.50 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக ஓரிடத்தில் வென்றது.

 

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (21)

வாக்கு சதவீதம்

பிஜூ ஜனதாதளம்

20

44.10

பாஜக

1

21.50

காங்கிரஸ்

0

26

 

ஒடிசாவில் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சமபலத்தில் உள்ளன.  அதிகமான வாக்குகளுடன் பிஜூ ஜனதாதளம் முன்னிலையில் உள்ளது. இதனால் பிஜூ ஜனதாதளத்தை வீழ்த்தும் அளவுக்கு இரு பெரும் தேசியக் கட்சிகளுக்கு வலிமை இல்லை. எனினும் காங்கிரஸ் வாக்குகளை பாஜக பெறப்போகிறதா அல்லது பாஜக வாக்குளை காங்கிரஸ் கூடுதலாக பெறப்போகிறதா என்ற போட்டி இந்த தேர்தலிலும் தொடரக் கூடும்.

பாஜகவை பொறுத்தவரையில் வரும் மக்களவை தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள புரி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளி வந்தது. எனினும் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (21)

வாக்கு சதவீதம்

பிஜூ ஜனதாதள கூட்டணி

பிஜூ ஜனதாதளம்

14

37.23

இந்திய கம்யூனிஸ்ட்

1

2.57

காங்கிரஸ்

6

32.75

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x