Published : 22 Feb 2019 10:12 AM
Last Updated : 22 Feb 2019 10:12 AM

சத்ருகன் சின்ஹாவுக்கு பாஜக ‘டிக்கெட்’ மறுப்பு

நடிகர் சத்ருகன் சின்ஹா இப்போது பிஹார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே மத்தியில் பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். எனினும், சமீபத்தில் பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதை வரவேற்று மோடியையும் புகழ்ந்தார். தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்காக மோடியை அவர் புகழ்ந்து பேசியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பாட்னாவில் நேற்று பேட்டியளித்த பிஹார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியதற்காக சத்ருகன் சின்ஹாவுக்கு நன்றி. பாஜக மீதான விமர்சனம் குறித்து சத்ருகன் சின்ஹா தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முடியாது.கட்சிக்கு எதிராக இருந்துவிட்டு மீண்டும் ஆதரவாகப் பேசினால் ‘டிக்கெட்’ கிடைக்கும் என்று நினைப்பது தவறு.

அதேநேரம், எங்களிடம் இருந்து பிரிந்து சென்றாலும் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் மீது பாஜக மதிப்பு வைத்துள்ளது. அவர் எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x